அச்சு அசலாக ஜோதிகா மாதிரியே இருக்கும் அவரது மகள்…! இப்படி வளந்துட்டாங்களே..!! என்ன அழகுப் பாருங்க..

நடிகர் சூர்யாவுக்கு விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிகளவு ரசிகர்கள் படை இருக்கிறது. சூர்யா நடிக்கும் படங்களும் கமர்ஷியல் ரீதியாக தொடர் வெற்றியை பெற்றுவருகிறது. கேரளத்திலும் இவருக்கு கணிசமான ரசிகர்கள் படை இருக்கிறது.

   

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசன் என்னும் தன் அமைப்பின் மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கும் தொடர்ந்து உதவிவருகிறார். இவரது தந்தை பிரசித்தி பெற்ற நடிகர் சிவகுமாரும், இவரது மனைவி ஜோதிகாவும் அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக்கொண்ட சம்பவமும் நடந்தது.

நடிகர் சூர்யா, ஜோதிகாவை காதலித்துத் திருமணம் செய்தவர். கோதிகா திருமணத்துக்குப் பின்பு, நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். மலையாளத்தில் மஞ்சுவாரியார் நடித்து மெகா ஹிட்டான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’வின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘36 வயதினிலே’யில் ரீ எண்ட்ரி கொடுத்தவர் இப்போது பெண்களை மையப்படுத்திய பாத்திரங்களில் நடித்துவருகிறார்.

இந்தத் தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.இவர்கள் இதுவரை குழந்தை நட்சத்திரமாகக் கூட இதுவரை எந்தப்படத்திலும் தலைகாட்டியது இல்லை. இதில் சூர்யா, ஜோதிகாவின் மூத்த மகள் தியா அச்சு, அசப்பில் ஜோதிகா போலவே இருக்கிறார்.

அதிலும் தியா இப்போது, ஜோதிகாவின் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார். தியாவின் தம்பி தேவ் சூர்யா போலவே உள்ளார். இந்த இரு குழந்தைகளுடனும் ஜோதிகா இருக்கும் படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.