அச்சு அசலாய் கமலஹாசனை போலவே இருக்கும் ரசிகர்…. அம்மாடி நடை, உடை, பாவனை, குரல் எல்லாமே அவரைப் போலவே இருக்கே…. வைரலாகும் வீடியோ இதோ…

உலகநாயகன் கமலஹாசனை போலவே அச்சு அசலாய் இருக்கும் நபரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடிகராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டவர்.

   

இவர் தனது கடுமையான உழைப்பாலும் முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார். நடிகர் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது கமலஹாசன் இந்தியன்2, மற்றும் பிக் பாஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது இணையதளங்களில் பிரபலங்களைப் போல இருப்பவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை போல பாகிஸ்தானில் இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகி வைரலானாது. இதைத் தொடர்ந்து இளைய தளபதி விஜய் போன்றிருக்கும் ரசிகர் ஒருவரின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதைப்போல தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனின் அச்சடித்தார் போல் இருக்கும் அவரது ரசிகர் ஒருவரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காணப்படுபவர் பார்ப்பதற்கு அச்சு அசலாய் கமலஹாசனை போலவே உள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…