அச்சு அசலாய் குழந்தை போலவே மாறிய போட்டியாளர்கள்!… வியந்து பார்க்க வைத்த விக்ரமன்!… கலக்கல் ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது  இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இவர்களில் 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

   

76 நாட்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார், யார் பிக் பாஸ் டைட்டில் வெல்ல போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு ஜனனி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் தனலட்சுமி தான் வெளியற்றப்படுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது  இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் என்ன சொல்ல விரும்பிலும் அதனை குழந்தை மொழியில் பேசுமாறு கமல் கூறுகின்றார். உடனே விக்ரம் எழுந்து அச்சு அசல் குழந்தை போலவே மாறி நடித்துக் காட்டுகின்றார். அதில் அவரின் நடிப்பு நன்றாக இருப்பதனால் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து அமுதவாணன், ஷிவின், ஆகியோரும் குழந்தை மொழியில் பேசுகின்றார்கள். ஆனால் கமல் அசீம் பேசும்போது ‘நீங்க குழந்தை மொழி பேசும்போதே 4வயசு கூடுகிறது’ எனக் கூறி சிரிக்கின்றார். இவ்வாறு இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ கலக்கலாக வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….