அச்சு அசல் மூக்குத்தி அம்மன் நயன்தாரா போல் மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினி! புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் தான். கடந்த சில நாட்களாகவே இந்த சீரியல்களின் மெகா சங்கமம் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தந்த கதைக்கு ஏற்றவாரு எல்லா காட்சிகளையும் வைத்து வருகிறார் இயக்குனர். இந்த சீரியல்களின் மெகா சங்கமத்தில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் இரண்டு சீரியல்களுக்குமே இயக்குனர் பிரவீன் பென்னட் தான்.

   

 

இந்த சீரியலில் சிறந்த குடும்பம் யார் என்ற தலைப்பில் பெரிய போட்டி ஒன்று நடந்து வருகிறது, அதற்கு நடுவர்களாக அண்மையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரபலங்களான ரியோ, சம்யுக்தா, சோம சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்த சீன்கள் கூட அண்மையில் ஒளிபரப்பானது.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி, அம்மன் போல் அபப்டியே நடித்து அசத்தியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சென்ற வருடம் ஹாட்ஸ்டார் ஓடிடி தலத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நயன்தாரா போலவே, நடித்து அசத்தியுள்ளார் ரோஷினி என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..