
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகின்றது. இதனிடையே இவரின் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுசை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விடுவதாக அண்மையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர். இதனிடையே கலந்த டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அன்று போயஸ் கார்டனில் இல்லாமல் வெளியில் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து தந்தையின் பிறந்த நாளில் தன் மகன்கள் யாத்திரை மற்றும் லிங்காவை அப்படியே ஒழித்து வைத்திருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அப்படியே சூப்பர் ஸ்டார் மாதிரியே மூத்த மகன் இருப்பதாக கருத்துக்களை பதிவிட்ட வைரலாக்கி வருகிறார்கள்.
Cannot capture something more beautiful..
Cannot caption some such bonds ..
My birthday boy with my boys ! #grandfatherlove❤️ #grandsonsrock???? pic.twitter.com/iCWLZ6b6n7— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) December 12, 2022