அடடே.. நடிகை சத்யபிரியாவின் மகளா இது?…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

   

தமிழ் சினிமாவில் 70- களில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் நடிகை சத்யபிரியா. இவர் 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் 1975 ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற படத்தில் விஜயகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தீபம், சக்ராயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். பின்னர் நாளடைவில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த நிலையில் அம்மா கேரக்டர் மற்றும் வில்லி கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். கோலங்கள், இதயம் மற்றும் வம்சமுள்ளிட்ட சீரியல்களில் சத்யபிரியா நடித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இவரின் மகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. அந்த திருமண விழாவிற்கு தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் வருகை தந்தனர்.இந்நிலையில் சத்யபிரியா மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.