
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நயன்தாரா, மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தற்போது “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதற்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ரசிகர்களை வாய்ப்பிழக்கும் படியான தோற்றத்தில் வந்துள்ளார்.