நடிகர் ஸ்ரீகாந்தின் அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் 2002ல் தமிழில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலிலேயே அதிகமான பெண் ரசிகைகளை கவர்ந்து ‘சாக்லேட் பாய்’ ஆக வலம் வந்தார். ‘ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
இறுதியாக இவர் இயக்குனர் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை. இவர் வந்தனா என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ…