
தொகுப்பாளினி ரம்யாவின் முன்னாள் கணவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் தொகுப்பாளினி ரம்யா.. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதை தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவை தாண்டி பளு தூக்கும் போட்டிகளிலும் கலந்து வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது இவர் உடற்பயிற்சி பற்றிய பல விஷயங்களை இணையத்தில் பதிவு செய்த வண்ணம் உள்ளார்.
விஜே ரம்யா தற்பொழுது இசை வெளியீடு, தனியார் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். விஜே ரம்யாவிற்கு அப்ரஜித் என்பவருடன் 2014 இல் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த அடுத்த ஆண்டே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் விஜே ரம்யாவின் முன்னாள் கணவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அவரின் புகைப்படம்….