அட இவர் தான் இயக்குனர் கௌதம் மேனனின் மகனா?… இவர் ஒரு பிரபல கிரிக்கெட் வீரரா?… பலரும் அறியாத தகவல் இதோ…

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் அதிகம் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவரது காதல் கதை படங்களுக்காகவே ஒருதனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் எழுதும் காதல் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

   

இயக்குனர் என்பதையும் தாண்டி தற்பொழுது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதாராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் அசத்தியுள்ளார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல விமர்சனத்தையும், வசூலில் சாதனையும் புரிந்தது.

இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஆர்யா யோஹன் மற்றும் துருவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில்  ஆர்யா யோஹன் தற்பொழுது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது பலரும் அறியாத ஒரு விஷயமே. இவர் லெஃப்ட் ஆர்ம்ஸ் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஆர்யா யோஹன் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் கெளதம் மேனன் தன் மகன் பெயரை மையமாகக் கொண்டுதான் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என விஜய் நடிக்க வேண்டிய ஒரு படத்திற்கு பெயர் சூட்டியிருந்தார் என்றும்,

 

அதேபோல அவரது இரண்டாவது மகனின் பெயர் துருவ் ,இவரின் பெயரைமையமாகக் கொண்டுதான் நடிகர் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்திற்கு பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

‘தனது மகன் ஆர்யா யோஹன் மிகவும் அர்ப்பணிப்பான மகன் எனவும், நிறைய பயிற்சிகளும் நிறைய பணிகளும் அதன் பின்னால் உள்ளது’ என தனது மகனைக் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.