நடிகர் சந்தானம் எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் இவர் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குளு குளு. தற்போது இந்தத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ‘ அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் ஃபயர் கன் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இதுதான் இப்பொழுது ட்ரெண்டா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் திரையுலகில் பிரபல நடிகரான சந்தானம்
அவர்களின் மகன் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய மகனின் பெயர் nipun (நிபுன்) புதுச்சேரியில் உள்ள சித்தானந்தர் கோவிலுக்கு தனது மகனுடன் நேற்று சந்தானம் வருகை தந்தார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.