அட…. நடிகை கஜோலின் மகளா இது?…. ஹீரோயின்களுக்கு டப் கொடுப்பாங்க போலயே…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் “மின்சார கனவு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி 2 ” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

தற்போது இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார்.இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் கஜோலின் பிறந்தநாள் அன்று அவரின் மகள் நைசா தேவ்கன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.