அட…. மகேஷ் பாபு மகளா இது?…. இப்படி வளந்துட்டாங்களே…. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் முதன் முதலில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வெளியான புகாரி, ஒக்கடு, அத்தடு போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்ததால் தெலுங்கில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தெலுங்கு நடிகை நர்மதாவை காதலித்து கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் என்ற மகனும் சித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் மகள் சித்ரா தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் மகேஷ் பாபுவின் மகள் சித்ராவா இவ்வளவு வளர்ந்து விட்டார் என்று கேட்டு வருகிறார்கள். மேலும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.