அந்தரத்தில் தொங்கும் கண்டெய்னர் லாரி.. உங்க வாழ்நாளில் இப்படி ஒரு விபத்தை பார்த்துருக்கவே மாட்டீங்க..!

சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

   

வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும். இங்கேயும் அப்படித்தான் ஒரு டிரைவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே அசந்து தூங்கிவிட்டார்.

அப்போது பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, பக்கவாட்டு சுவர் மீது மோதி அந்திரத்தில் தொங்கியபடி நின்றது. இப்படியொரு லாரி விபத்தை இதுவரை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள் என்பதுபோல் அந்த லாரி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.