
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் குரங்குக்கு உணவு ஊட்டி விடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் நாம் தூங்கி எழுந்து வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து தூங்குவது வரை ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நம்மை பார்த்துக் கொள்வதற்கு நமக்கு நேரம் போதவில்லை. ஏனென்றால் இணையம் ஒரு தனி உலகமாக மாறி வருகின்றது. நமக்கு தேவையான பல விஷயங்களைப் பற்றி மட்டுமே நாம் யோசித்து வருகிறோம்.
இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் நம் மனதிற்கு ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை தான் நாம் பார்க்க போகிறோம். ஆந்திர மாநிலம் கப்பல தாலுகாவின் ஜபலக்குடா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று மதியம் உணவு இடைவேளை சமயத்தில் ஒரு குரங்கு ஒன்று உணவு உண்ணும் மாணவர்களை தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
இதை கவனித்த தலைமையாசிரியர் ஒரு தட்டில் உணவை போட்டுக் கொண்டு வந்து தரையில் அமர்ந்து குரங்கின் அருகில் சென்று குரங்குக்கு உணவு ஊட்டுகின்றார். முதலில் தயங்கிய குரங்கு சிறிது நேரத்தில் உணவை சாப்பிட தொடங்கியது. மாணவர்களிடையே அமர்ந்து தலைமை ஆசிரியர் குழந்தைக்கு ஊட்டுவது போல் குரங்குக்கு உணவை ஊட்டி வந்தார். இதை பார்த்து பலரும் ஆச்சியப்பட்டார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானது. தலைமை ஆசிரியருக்கு அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்…