அரைகால் ட்ரவ்சரில் நடிகை ஸ்ருதி ஹாசன்.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்காங்களே! புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் குதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்ததாக இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். நடிப்பு, இசையமைப்பாளர் என அசத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

   

சமீபத்தில் இவர் நடித்த கிராக் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். சமீபத்தில் கூட ஸ்ருதி ஹாசன் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிய வருகிறது. பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக திகழும் ஸ்ருதிஹாசனின் பள்ளி புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ்வாகவே இருந்து வந்தார். தற்போது நடிப்பில் தந்தைக்கு நிகராக தனது திறமையினை வெளிக்காட்டி வரும் ஸ்ருதி பள்ளி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் அரை ட்ரவ்சர் அணிந்து கொண்டு சக தோழிகளுடம் காணப்படுகின்றார்.