அரை மணிநேரத்தில் கூகுளை அலறவிட்ட வெப் டிசைனர்! என்ன செய்தார் தெரியுமா?

உலகில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தேடுபொறியானது கூகுள்.

மேலும், கூகுள் டொமைன் பெயரை (Google domain name), உயர்மட்ட பாதுகாப்பு காரணமாக எவரும் அதை எளிதாக வாங்கவோ தவறாக பயன்படுத்தவோ முடியாது.

இதனிடையே, கூகுள் டொமைன் பெயரையும் 30 வயது இளைஞர் ஒருவர் வாங்கியுள்ள ச.ம்.பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலளித்த அர்ஜென்டினாவை சேர்ந்த வெப் டிசைனர், “நான் எனது ப்ரவுஸரில் www.google.com.ar-ஐ டைப் செ.ய்.தேன்,

அது வேலை செய்யவில்லை. என்னடா இது விசித்திரமான ஒன்று நடக்கிறது என தொடர்ந்து பார்க்கும் போது கூகுளின் URL, google.com.ar-ஐ அவர் தேடியபோது, அந்த டொமைன் பெயர் வெறும் 70 பெசோஸ்-க்கு கிடைப்பதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்தேன்.

அதன் பின்னர், சரி வாங்கி தான் பார்க்கலாம் என http://google.com.ar இலிருந்து டொமைனை வெறும் 70 பெசோஸ்க்கு வாங்கினேன். இதை ட்விட்டரிலும் பதிவிட்டேன்.

நான் ஒருபோதும் மோ.ச.மா.ன நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை. நான் அதை வாங்க முயற்சித்தேன், என்.ஐ.சி என்னை அனுமதித்தது’ என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கூகுள் டொமைனை வங்கியிருந்தாலும் வெறும் அரை மணி நேரத்தில் மீண்டும் கூகுளின் க.ட்.டுப்பாட்டுக்கு சென்றது.