அறந்தாங்கி நிஷாவின் மகளை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் StandUp நகைச்சுவை கலைஞராக தொலைக்காட்சியில் அறிமுகமானவர், அறந்தாங்கி நிஷா. இதன்பின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், ராமர் விடு, மற்றும் பிக் பாஸ் என தொடர்ந்து விஜய் டிவியின் மூலம் நம்ம சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். இதன்பின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கான தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்தார்.

   

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அறந்தாங்கி நிஷா. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம்ம சிரிக்க வைத்தார். அறந்தாங்கி நிஷா ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சபா ரியாஸ், ஹர்ஷத் ரியாஸ் என இரு பிள்ளைகள் உள்ளன.

இதில் அறந்தாங்கி நிஷா மகனின் புகைப்படம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வெளியானது. ஆம் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற KPY காமெடி திருவிழா நிகழ்ச்சியில் தனது அம்மாவிற்கு பரிசு தர வந்துள்ளார் அறந்தாங்கி நிஷாவின் மகன். இந்நிலையில் அறந்தாங்கி நிஷாவின் மகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..