“அலுமினிய பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட குரங்கின் தலை… அட கொடுமையே! வைரல் வீடியோ

தெலுங்கானா மாநிலம் மகபூப் பாத் அருகே குரங்கின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெயில் கொடுமை காரணமாக அங்குள்ள வெங்கடேஸ்வரா காலனி குடியிருப்பு பகுதியில் நுழைந்த குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டிக் கொண்டது.

இதனை அடுத்து அந்த பாத்திரத்தை எடுக்க குரங்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. மேலும் அங்கு வந்த மற்றொரு குரங்கும் முயற்சித்தும் பலன் இல்லை

இதனை அடுத்து அந்த குரங்கு உணவு உண்ண முடியாமல் தண்ணீர் அருந்த முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த குரங்கை பிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.