ஆர்யாவுடன் டெடி படத்தில் பொம்மையாக நடித்தது யாரு தெரியுமா? முதன்முறையாக வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. எப்போதும் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். திரையுலக வாழ்வுக்காகவும், திரைப்படங்களுக்காகவும் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் உடலை வருத்திக்கொள்வதை ஆர்யா வழக்கமாக வைத்திருக்கிறார். படத்துக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் ஆர்யா தயங்குவது இல்லை. நான் கடவுள், ராஜா ராணி, இரண்டாம் உலகம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

   

தற்போது தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர்யா. இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா மற்றும் சயீஷா நடிப்பில் மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் வெளியான திரைப்படம் டெடி. இப்படத்தை நாணயம், மிருதன், டிக் டிக் டிக், உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தான் இயக்கியுள்ளார்.

டெடி திரைப்படம் திரையில் வெளியாகவில்லை என்றாலும், ஓடிடி மூலம் குழந்தை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதில் ஆர்யாவுடன் இணைந்து கலக்கிய டெடி, ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் டெடி பொம்மை போல் நடித்திருந்த நடிகரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..