
ஒரு வயதான நபர் ஒருவர் ரோட்டில் படுத்துக்கொண்டு ஆங்கில புத்தகம் படிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. உருவத்தை பார்த்து திறமையை எடை போடாதே என்று பலரும் கூறுவார்கள். அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படிப்பட்ட குணாதிசயத்தை கொண்டவர்கள், நல்லவர்களாக கெட்டவர்களாய் என்று எடை போடுவது தவறு.
ஒரு மனிதரிடம் பழகிப் பார்த்தால் தான் அவர் எப்படிப்பட்டவர் என்பதே நமக்கு தெரியவரும். அப்படித்தான் பிளாட்பார்மில் ஒரு நபர் படுத்துக்கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு இளைஞர் அவருக்கு அருகில் இருந்த புத்தகத்தை பார்த்து இதெல்லாம் விற்பனைக்கு என்று கேட்க ஆம் என்ற எவ்வளவு என்று கேட்க இந்த புத்தகத்தின் விலை 800 ஆனால் நான் அம்பது ரூபாய்க்கு தருகிறேன் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தார். அந்த புத்தகம் கிடைக்குமா என்று கேட்டதற்கு இந்த புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்த பிறகு வேண்டும் என்றால் நீங்கள் வாங்கிச் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். இது ஆங்கிலத்தில் உள்ளது எப்படி படிக்கிறீர்கள் எனக்கு படிக்க தெரியும் நான் படிக்கிறேன் என்று கூறினார். இதை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமானது. இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…