இசை வெளியிட்டு விழாவில் மனைவியிடம் அனுமதி கேட்டு காதலைச் சொன்ன சிவகார்த்திகேயன்.. யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசுகையில், ரஹ்மான் சாரின் பாடல் மற்றும் இசையுடன் தான் நான் வளர்ந்தேன். இப்போது அவருடைய ‘அயலான்’ பட பாடல்களால் வளரப் போகிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறு வயதில் இருந்தே ரஹ்மான் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. விஜய் டிவியில் ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. முன்பே நிறைய பேசக் கூடாது, குறைவாகத் தான் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தொகுப்பாளர் என்பதால் புத்திசாலித்தனமாக எதையாவது கேட்க வேண்டும் என்று கேள்விகளை எல்லாம் தயார் செய்து வைத்திருந்தேன். அவரிடம் சென்று “ஆஸ்கர் வாங்குவதற்கு முன்பு இருந்த ரஹ்மானுக்கும் இப்போது இருக்கும் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “வயசுதான்” என்று சொல்லி சிரித்து விட்டு போய் விட்டார்.

என் அப்பா ரஹ்மான் சாரின் மிகப்பெரிய ரசிகர். நான் அவருடன் இணைந்து பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் சார் ஒரு உதாரணம். அவர் எது செய்தாலும் அதில் ஒரு சர்வதேச தரம் இருக்கும் என்று கூறினார். மேலும் இறுதியாக ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐ லவ் யூ என்று தனது காதலைக் கூறினார். அதனைக் கூறிய பின்பு அவரது மனைவியிடம் சாருக்கு ஐ லவ் யூ கூறிவிட்டேன் உங்களது அனுமதி வேண்டும் என்று கூறிய பின்பு அரங்கமே சிரிப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *