
முன்னணி சீரியல் நடிகையான ஷபானா தளபதி விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் பிரபலமான சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை ஷபானா. இவருக்கு சினிமா கதாநாயகிகளை விட ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளது.
இவர் இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதை பல முறை பல இடங்களில் அவரே கூறியுள்ளார். இவர் கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஷபானாவும் சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் நடிகை ஷபானா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்…