தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலிப் குமார் , இவர் தமிழில் மூன்று படங்கள் மட்டுமே மட்டுமே இயக்கினாலும் , முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் அதற்க்கு காரணம் இவர் அண்மையில் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தான் , இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது தோன்றியது ,
ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது ,இருந்தலும் வசூலில் பஞ்சம் காட்டவில்லை , பெரிய அளவிலான வெற்றியை தேடி தரவில்லை என்றாலும் தளபதியின் மாஸ்காகவே எதனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் என்று அவரின் ரசிகர்கள் REPEAT மோடில் கண்டு வருகின்றனர் ,
இந்த திரைப்படத்தில் வந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று தந்தது , இதில் சிவ கார்த்திகேயன் வரிகள் எழுதி அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கு ரசிகர்கள் பலரும் டப்ஸ்மாஷ் செய்து வந்தனர் , தற்போது நெல்சன் மகனும் அந்த பாடலில் வரும் படியே நடனமாடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் , இதோ அந்த காணொளி .,