அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.
இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.
சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்..
புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்..சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள்.
அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான். இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.