சிறு வயதிலே மாடலிங் துறையில் நுழைந்தவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராகத்தான் பணிபுரிந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்பின் தான் மாடலிங்கில் நுழைந்தார். மாடலிங் துறையில் நெறய அனுபவம் கொண்டவர் நடிகை பார்வதி. முதலில் நடித்தது மலையாள திரைப்படத்தில்தான். 7 மலையாள திரைப்படங்களில் நடித்த பின்புதான் இவர் தமிழுக்கு வந்தார்.
தமிழில் “என்னை அறிந்தால்” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அருண் விஜயின் மனைவியாக நடித்திருப்பார். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான நடிகை ஆனார் நடிகை பார்வதி நாயர் அவர்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு உத்தம வில்லன்,மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
மேலும், மாடலாகவும் வளம் வரும் நடிகை பார்வதி நாயர் அவர்கள், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியுள்ளார் நடிகை பார்வதி நாயர்.