திருமணம் செய்து கொள்ளப்போகும் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு சில இடங்களுக்கு சென்று ப்ரீ வெட்டிங் ஷூட் எடுப்பது வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இயற்கை அழகு மிளிரும் இடத்தில் புகைப்படங்கள் எடுப்பதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் ஜிம்மிற்கு போட்டோ ஷுட் எடுக்கச் சென்றுள்ளார். இந்த வீடியோவை ஐபிஎஸ் ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப் பகிர்ந்த அவர், ‘ப்ரீ வெட்டிங் ஷூட்.. இன்று இவரது தைரியத்தின் ரகசியம் தெரிந்தது’ என்று எழுதியுள்ளார். சுமார் 30 நொடி ஓடும் இந்த காணொளியில்,
மணப்பெண் ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்காக நன்றாக அலங்காரம் செய்துகொண்டு ஜிம்மிற்கு செல்கிறார். அங்கு சென்று கைகளுக்கான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குகிறார்.
அதன் பின்பு டம்பல்ஸைக் கூட தூக்குகிறார். இதனை அவதானித்த நெட்டிசன்கள் திருமணம் நடக்க இருக்க நேரத்துல இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழும்பி வருகின்றனர்.
Pre-wedding shoot…????
Aaj raaz khula himmat ka……. pic.twitter.com/1d9bJDVMqa
— Rupin Sharma IPS (@rupin1992) November 19, 2021