இந்தப் புகைப்படத்தில் இருக்கும் கியூட் குட்டி குழந்தை யார் தெரியுமா?… இவர் ஒரு பிரபலம் முன்னணி நடிகை!… கண்டுபிடிச்சிட்டீங்களா!…

பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தனது பயணத்தை தொடங்கி, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத் தொடர்ந்தவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

   

மேலும் இவர் லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும், நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி-யின்  அரண்மனை 3 திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் கா மற்றும் பிசாசு 2 படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி ஆகவும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது  பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் முன்னணி நடிகையான ஆண்ட்ரியாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘நடிகை ஆண்ட்ரியாவா இது? இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…