இந்த எளிய மனிதருக்குள் இப்படியொரு திறமையா? இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானையே மிஞ்சிடுவார் போலருக்கே…!

ஒரு சாமானிய சாலையோரவாசி ஒருவரின் திறமை புல்லரிக்க வைத்துள்ளது. அப்படி அவர் என்ன செய்துள்ளார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அசாத்திய திறமைகளைக் கொண்டுள்ளார். மிகச்சிறப்பாக மேஜிக் காட்டுகிறார். அதுமட்டும் இல்லாமல் அவரது இசைத்திறமையை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். ஆம் இரண்டு மெல்லிய கம்பிகளை வைத்துக்கொண்டே பாடல்களை அப்படியே வாசித்துக்காட்டி அசத்துகிறார். அதிலும் படையப்பா படத்தில் இடம்பெற்ற சுத்தி, சுத்தி வந்தீங்க பாடலை அப்படியே அச்சுப்பிசகாமல் வாசித்து அசத்துகிறார். இதேபோல் ஒகோகோ கிக் ஏறுதே..உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே பாடலையும், முக்கால பாடலையும் செம நேர்த்தியாக வாசித்து அசத்துகிறார். ஷாருக்கானின் இந்திப் பாடலையும் அவரே செய்த அந்த கம்பிப் பலகையில் வாசித்து அசத்துகிறார்.

இளையராஜாவையும் ஒருமுறை சந்தித்திருக்கிறார் இந்த தெருக்கலைஞர். அப்போது இளையராஜா, ‘23 கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியதை இரண்டு கம்பியை வைத்தே செய்துவிட்டாயே..’ எனப் பாராட்டினாராம். இவரது திறமையை இளைஞர்கள் சிலர் வீடீயோவாக எடுத்துப்போட அத் இப்போது வைரலாகிவருகிறது. இதோ நீங்களே இவரின் திறமையைப் பாருங்கள். வீடியோ இதோ…