இந்த ஜெயம் பட நடிகரை நியாபகம் இருக்கிறதா? பட வாய்ப்புகள் இல்லாமல் அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

காதல் கோட்டை, வாலி, எங்கள் அண்ணா, ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ராஜிவ். போதுவாக இடைக்கால படங்களில் குணசித்திர வேடத்தில் காணப்பட்டவர் தற்போது எந்த குணசித்திர படத்திலும் தோன்றுவதில்லை. இவர் மதுரையை சேர்ந்தவர். பெங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் வேலை இல்லாமல் பல காலம் சுற்றினார். இந்த நேரத்தில் அவரது பெற்றோர் இறந்துவிட, அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார் அவரது தம்பி , இதனால் ராணி என்பவரை திருமணம் செய்துகொண்டார் ராஜீவ்.

   

இதனால், அவருக்கு கிரண் சூரியா என்ற மகனும் மீனா காமாட்சி என்ற மகளும் பிறந்தனர். சினிமாவில் ஹீரோவாக பல திரைடப்பட ஆடிசனுக்கு சென்று, மீண்டும் மீண்டும் தோல்வியை மட்டுமே சந்தித்தார்.

ஒரு கட்டத்தில் எந்த வேலையும் கிடைக்காமல் சுற்றினார் ராஜிவ். அந்த நேரத்தில் கிடைத்த வேலை எல்லாம் செய்தார் ராஜிவ். தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வெயிட்டராகவும் வேலை செய்தார். அதன் பின்னர் அவருடைய கல்லூரி கால நண்பர் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை சந்தித்தார். இதன் மூலம் இவருக்கு சில படங்களில் டப்பிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

ஒருதலை ராகம், ரயில் பயணங்கள் உள்ளிட்ட படங்களுக்கு டப்பிங் பேசினார் ராஜிவ். அதன் பின்னர் ஹீரோ ஆசையை விட்டு பல படங்களில் வில்லன் மற்ரும் அப்பா கேரக்டர்களில் நடித்து வந்தார். தற்போது கடந்த சில வருடங்களாக அவரை எந்த ஒரு படத்திலும் பார்க்க முடிவதில்லை.