
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் அவர்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழில் தனுஷ் நடித்த ‘3’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடல் உலகெங்கும் பரவியது. இதன் மூலம் அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இதைத் தொடர்ந்து இவர் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, இரண்டாம் உலகம், மாநகராட்சி, கத்தி, மாரி, நானும் ரவுடிதான், தங்க மகன், கோலமாவு கோகிலா, பேட்ட, தாராள பிரபு, மாஸ்டர்,டாக்டர், காத்து வாக்குல ரெண்டு காதல் என பல எண்ணற்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்பொழுது இவர் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்துக்கு இசையமைத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் சிறுவயதில் எடுக்கப்பட்டுள்ள எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்…