
குழந்தை ஒன்றுக்கு தந்தை அழகாக உணவு ஊட்டி விடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். பல விஷயங்களை அவர்கள் தங்களது கண்களால் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.
ஒரு தந்தை தனது மகளுக்கு உணவு ஊட்டும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது இந்த வீடியோவில் முதலில் அவரின் தந்தை ஒரு பொம்மையை கையில் வைத்துக்கொண்டு அதற்கு அருகில் தனது மகளையும் அமர வைத்துள்ளார். ஒரு பவுலில் உணவு எடுத்துக்கொண்டு முதலில் ஒரு ஸ்பூன் உணவு எடுத்து பொம்மைக்கு ஊட்டுகிறார். பின்னர் அந்த பொம்மையை தனது கையால் தலையை ஆட்டுவது போல் செய்துவிட்டு அவரே கட்டையை எடுத்து அந்த பொம்மையை அடிக்கின்றார்.
இதையெல்லாம் அந்த குழந்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றது. பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் உணவு எடுத்து ஊட்ட அந்த குழந்தை அழகாக வாங்கிக் கொள்கின்றது. மறுத்தால் நமக்கும் அடி விழுகும் என்ற பயத்திலேயே அந்த குழந்தை சாப்பிடுகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் தான் சிறந்த தந்தை, உங்களுக்கு விருதே கொடுக்கலாம் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது .இதனை நீங்களும் பாருங்கள்…