இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இந்த இரண்டு நபர்கள் தானா?… வெளிவந்த உறுதியான தகவல் இதோ….

பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் வெளியேறி 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

   

இதை தொடர்ந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறி கமலஹாசன் போட்டியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். முந்தைய வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற, அதைத் தொடர்ந்து அவரது மகளான குயின்சி பிக் பாஸ் வீட்டை விட்டு விட்டு வெளியேறினார்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அசிம், ஜனனி, கதிரவன், ADK, ஆயிஷா மற்றும் ராம்  ஆகியோர் உள்ளனர். இதில் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்று ரசிகர்களிடம் ஒரு பெரிய கேள்வி இருந்தது. இந்நிலையில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் குறைந்த  வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று.