
‘இனியா’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகர் ரிஷி பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
சரிகம புரொடக்ஷன் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘இனியா’. இந்த சீரியலின் கதையை சேக்கிழார் எழுதுகிறார். இயக்குனர் நாராயணமூர்த்தி இயக்குக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகி ‘இனியா’ கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துக் கொண்டுள்ளார். இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது.
இத்தொடரில் கதாநாயகனாக விக்ரம் கதாபாத்திரத்தில் ரிஷி நடித்துக் கொண்டு வருகிறார். இந்த தொடரின் கதை ஆனது, ”இனியா மிகவும் சுட்டிப் பெண். துரு துரு என்று ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டிருப்பார். இவர் நல்லதுக்காக சின்ன சின்ன தவறுகளை கூட செய்யலாம் என்று நினைப்பவர். ஆனால் கதை ஹீரோவான விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரிஷி ஒரு ஸ்டிரிக்ட்டான போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இவர் ஒரு சின்ன சின்ன தப்பை கூட பூத கண்ணாடி வைத்து பார்ப்பவர். தப்பை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாதவர். எதிரும் புதிருமாய் இருக்கும் நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும் என்பது தான் இந்த சீரியலின் மீத கதை. இந்நிலையில் நடிகர் ரிஷி பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவர் தனது 17 வயதிலிருந்து நடித்துக் கொண்டு வருபவர். தனது 19 ஆம் வயதில் விஜய் டிவியின் மின் பிம்பங்கள் என்று சீரியலில் நடித்துள்ளாராம். இது தவிர வில்லன் கதாபாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஆனந்த தாண்டவம், பயணம் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் களமிறங்கி கலக்கியவர் தான் நடிகர் ரிஷி.
இவர் தனது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘இனியா’ சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் தான் தொகுத்து வழங்கவில்லை என்று கூறியிருந்தார். தற்பொழுது இவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.