நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தற்பொழுது முதல்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் நடிகை ஷாலினி. ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த படம் ‘அலைபாயுதே’. இத்திரைப்படம் தற்பொழுது வரை இளைஞர்கள் மனதில் நிலைத்து உள்ளது என்றே கூறலாம்.
இதைத்தொடர்ந்து ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படத்திலிருந்து நடிகர் அஜித்துக்கும் ஷாலினிக்கு இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் 2000ல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட ஷாலினி 2001க்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பிரியாத வரம் வேண்டும்’. தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகர் அஜித் பப்ளிசிட்டியை விரும்பாதவர். எனவே அவர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது கிடையாது. அதேபோல அவரது மனைவி ஷாலினியும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அதிகார பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார். தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ஷாலினி என்ட்ரி கொடுத்த தகவல்கள் அறிந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை அவரை 34,000 பேர் வரை பின் தொடர்கின்றனர் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.