இப்படியொரு டீச்சர் கிடைச்சா பள்ளிக்கூடமும் சொர்க்கம் தான்…! மிஸ் பண்ணவே கூடாத வீடியோ..! இவுங்க தான் ரியல் டீச்சரம்மா!

பள்ளிக்கூடத்தில் நம்மை மெருகேற்றுவதில் ஆசிரிய, ஆசிரியைகளின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் சில டீச்சர்கள் எல்லாம் அமைந்துவிட்டால் நம் வாழ்வையே மாற்றிவிடுவார்கள். அப்ப்படியான ஒரு டீச்சரை பற்றிய செய்திதான் இது!

பொதுவாகவே ஆசிரியர்களில் இரண்டுவகையினர் உண்டு. சிலர் சம்பளத்திற்காக வேலைசெய்வார்கள். இன்னும் சிலரோ சம்பளத்தை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் ஆத்மார்த்தமாக வேல செய்வார்கள். இங்கே அப்படித்தான். ஒரு டீச்சர் இருக்கிறார்.

   

அவர் பனிசெய்வதோ ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம். வருடத்டில் இறுதியில் அவரிடம் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு மண் பானை உண்டியல் இலவசமாக வழங்குகிறார்.

அந்த உண்டியலில் காசு சேர்த்து அந்தப் பணத்தில் அடுத்த வருட இறுதியில் மரக்கன்று வாங்கி நடச்சொல்கிறார். கூடவே, டீச்சர் நினைத்தால் இப்போதே மரக்கன்று வாங்கிக் கொடுத்துவிடுவேன். ஆனால் நீங்களே கஷ்டப்பட்டு சேர்த்த காசில் மரக்கன்று வாங்கி நட்டால்

அது உங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதாலேயே உண்டியலை மட்டும் கொடுக்கிறேன் என்கிறார் அந்த டீச்சர். அந்த டீச்சர் பேசும்போதே நம்மையும் அறியாமல் மரம் வளர்க்க வேண்டும், உண்டியலில் காசு சேமிக்க வேண்டும் என்னும் உணர்வு உந்தப்படுகிறது. இதோ நீங்களே இந்த டீச்சரின் மொழியைக் கேளுங்களேன்.