
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன்முறையாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்துள்ளார்.
வாடகை எவ்வளவு?
இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறுகையில், எங்கள் மொத்த தலைமுறையிலும் ஒரு பெண் குழந்தை கூட கிடையாது.
அதனால், நாங்கள் எங்களது மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தோம். அதற்காக, ரூ.1 லட்சத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் எங்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH Shelgaon, Pune | Grand Homecoming ! A family brought their newborn girlchild in a chopper
We didn’t have a girlchild in our entire family. So, to make our daughter’s homecoming special, we arranged a chopper ride worth Rs 1 lakh:Vishal Zarekar,father
(Source: Family) pic.twitter.com/tA4BoGuRbv
— ANI (@ANI) April 5, 2022