நல்ல வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்பது அனைவரின் வாழ்நாள் கனவாகும். அதேநேரத்தில் பலருக்கும் வீடு கட்டுவதற்கான இடமே மிகவும் சின்ன அளவில் தான் இருக்கும்.
அந்த இடத்திற்குள்ளாகவே அவர்கள் வீடு கட்டிக் கொள்வதில் மிகவும் சிரமத்தை அனுபவிப்பார்கள். அதேநேரம் சிலரோ மிகவும் சின்ன இடமாக இருந்தாலும்
அதற்குள் சாமர்த்தியமாக வீடுகட்டிக் குடியேறிவிடுவார்கள். அதில் அவர்கள் இடப்பற்றாக்குறையைப் போக்கும்வகையில் சில நுட்பங்களைக் கடைபிடிப்பார்கள்.
அந்தவரிசையில் இங்கேயும் ஒரு மலையாளி பார்த்து, பார்த்து தன் வீட்டை மிகவும் அழகாகக் கட்டியிருக்கிறார். அவரது வீட்டுக்குள் குறுகிய அளவே இடம் இருந்தது.
இதற்காக அவர் வழக்கமாக வீட்டின் உள்பகுதியில் இருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்குப் பதிலாக அதை ஸ்டீலில் அமைத்துள்ளார்.
கூடவே அந்த படிக்கட்டையும் இமாம் அண்ணாச்சியின் டேபிள் மேட் ஸ்டைலில் சுருக்கி, விரிப்பது போல் அமைத்துள்ளார். தேவைப்படும்போது மட்டும் அந்தப் படிக்கட்டை விரித்துக்கொள்ளவும்.
தேவை முடிந்ததும் சுருக்கிக் கொள்ளவும் செய்யக்கூடிய வகையில் தன் வீட்டு வாயில்படியை அமைத்துள்ளார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இது இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.