விபத்தே இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய கலை. அதனால் தான் அரசுப்பணியில் கூட விபத்தே இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசும், ஊக்கத்தொகையும் வழங்குகிறார்கள். சாலை வாகனத்தை பொறுத்தவரை நாம் ஓட்டிப் படிக்கும் காலம் தொட்டே வளைவில் முந்தக்கோடாது என்பதுதான் தாரக மந்திரமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
ஆனால் பலரும் அதை பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே சாலையில், சில இடங்களில் இது அபாயகரமான வளைவு எனவும் பதாகை வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வளைவில் அடித்துச் செல்வோரும் உண்டு. இதேபோல், இன்னும் சில டிரைவர்கள் இருக்கிறார்கள்.
கடுகளவுகூட பொறுக்க மாட்டார்கள். ஸ்பீடாக பாய்ந்து செல்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஆயில் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து சாலை முழுவதும் எண்ணெயாகக் கிடந்தது.
அப்போது அந்த வழியாக இன்னொரு லாரி வந்தது. எண்ணெயில் சக்கரம் வழுக்கும் என்பதால் மற்ற வண்டிகள் ஒதுங்கியே நின்றது. ஆனால் இந்த லாரி மட்டும் அப்படி நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
கடைசியில் இந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எண்ணெயில் சறுக்கிய வாறே சிறிதுதூரம் சென்றது. கடைசியில் டிரைவர் சாமர்த்தியமாக லாரியை நிறுத்தி ஓட்டிச் சென்றார். இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன்.