இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான்..! ஆசிரியர்களுக்கு முன் செய்ற வேலையா இது..? வைரல் வீடியோ

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.

தற்போது உள்ள இளைஞர்கள் இணையத்தில் அதிக அளவில் நேரத்தை செலவிட்டு வந்தாலும், கலை ஈடுபாடு குறையவில்லை என்றே சொல்ல வேண்டும். நண்பர்களின் திருமணங்கள்,

உறவுகளின் திருமணம் என்று அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டு தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போடும் விதம் அங்குள்ள அனைவரையும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.குறித்த இந்த வீடியோ காட்சியில் ஒரு கல்லூரி ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இருக்கின்றனர்.

அப்போது ஒரு மாணவர் தனது காதலை அவரின் முன்னிலையில் ப்ரொபோஸ் செய்கிறார். குறித்த இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவு இதோ… நீங்களே பாருங்க