இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.. சூரியின் பிரச்சினை குறித்து பதிலளித்தி நடிகர் விஷ்ணு விஷால்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் படம் தான் காடன். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ராணா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மார்ச் 26 வெளியாகும் இப்படத்திற்கு விளம்பரபடுத்த விஷ்ணு விஷால் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, சூரியின் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்தி விஷ்ணு, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாகப் பதிலளிக்க இயலாது.

ஆனால், நிலம் சம்பந்தப்பட்ட புகாரில் எனக்கும், என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவர் அளித்த புகாரின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் விளக்கம் அளிக்க முடியும். மேலும், அப்படி செய்தால், சூரியின் இருண்ட பக்கங்களை விளக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால், எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சில வருடங்களுக்கு முன்னர் என் தந்தையின் காலில் விழுந்து வணங்கி, நீங்கள் தான் என்னுடைய கடவுள் என்று சொன்ன ஒருவர், தற்போது எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். சூரி மூலம் தான் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை’ எனக் கூறினார்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாகப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும். சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒரு நாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களைப் பற்றி உணர்ந்து கொள்வார்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *