
‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற பாடலின் மூலம் பிரபலமான பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியை இணையத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் மூலம் பாடகராக களம் இறங்கியவர் தெருக்குரல் அறிவு. இவர் காலா படத்தில் பாடிய ‘உரிமையை மீட்போம்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வடசென்னை, வந்தா ராஜாவா தான் வருவேன், நட்பே துணை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பட்டா சிட்டா, நாடோடிகள் 2, சூரறை போற்று, துக்லக் தர்பார் என பல படங்களில் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
குறிப்பாக இவர் ‘என்ஜாய் என் சாமி’ என்ற பாடலின் மூலம் தான் உலக அளவில் பிரபலமானார். ஆனால் இந்த பாடல் அவருக்கு சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி தந்தது. இந்த பாடல் இவரை உலகம் முழுவதும் தெரிய வைத்தது. இந்த பாடலை அவரே எழுதி சந்தோஷ நாராயணன் இசையில் பாடகி தீ யுடன் இணைந்து பாடி இருந்தார்.
இவர் தற்பொழுது பல பெரிய படங்களின் பாடல்களை எழுதிக் கொடுத்து விடுகிறார். இந்நிலையில் தற்பொழுது தனது காதலி யார் என்பதை தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தன் காதலியுடன் எடுத்துக் கொண்ட முழு புகைப்படத்தையும் வெளியிடாமல் கால்கள் மட்டும் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து பாடகர் தெருக்குரல் அறிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவருடைய காதலியின் பெயர் கல்பனா அம்பேத்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஒரு சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கல்பனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெருக்குரல் அறிவு குறித்த பல புகைப்படங்கள் இருப்பதும் தற்பொழுது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கல்பனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டறிந்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகின்றனர்.
இதோ அவரது புகைப்படம்….