இயற்கை எப்போதுமே அதிசயங்கள் நிறைந்தது.அதிலும் பறக்கும் பறவைகளை பார்ப்பதே அத்தனை ஆச்சர்யங்களை நமக்குத் தரும். அந்தவகையில் இப்போது ஒரு அதிசயம் கழுகு வடிவில் நடந்துள்ளது. பொதுவாக கழுகுகள் பார்க்கவே கம்பீரமாக இருக்கும். மிகவும் உயரத்தில் பறக்கும் ஆற்றலும் கழுகுகளுக்கு உண்டு. அதுமட்டும் இல்லாமல் கழுகுகள் ஓரளவு வரை தான் எடை இருக்கும் என்று தான் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல் கழுகுகள் மேலே இருந்து பறந்து வந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்லும். ஆனால் இங்கே ஒரு ஆளையே தூக்கிச் செல்லும் அளவுக்கு ராட்சச கழுகு ஒன்று உள்ளது. அதைப் பார்க்கவே நமக்கே பிரமிப்பாக இருக்கிறது.
ஒரு ஆளைவிட மிக பெரிதாக இருக்கும் இந்த கழுகு சுற்றி நின்று ஆயிரக்கணக்காணோர் புகைப்படம் எடுக்க மிக கம்பீரமாக நடைபோட்டு, அதன் பின் பறக்கிறது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.