
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி ஏழாவது வாரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் 21 போட்டியாளர்களில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இவர்களில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாசினி போன்றோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ‘பிக் பாஸ் நீதிமன்றம் டாஸ்க்’ இந்த வாரம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வழக்கையும், வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுத்து நீதிபதி முன் வாதாடி வருகின்றனர்.
அந்த வகையில் அசிம் ‘உங்கள் தமிழில் பிரச்சினை போல’ என விக்ரமன் ஜனனி குறிப்பிட்டது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது’ எனக் கூறி வழக்கைத் தொடங்குகிறார். இதை தொடர்ந்து உடனே குயின்சியும், விக்ரமனும் ‘உங்கள் மொழியில் சிரமம் உள்ளதா?’ என்று தான் கூறப்பட்டது’ எனக் கூறுகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்து விக்ரமன் ‘அவரது மொழியில் பிரச்சினையே கிடையாது, அந்த செந்தமிழ் பேசுவது எனக்கே தடுமாற்றம் தான்’ எனக் கூறுகிறார். இதை தொடர்ந்து கூண்டில் ஏறிய ஜனனி விக்ரமன் ‘உங்கள் தமிழில் எனக்கூறியது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என மன வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ….