உயிரிழந்த வாலிபர்.. இளையராஜா பாடல் பாடி அடக்கத்துக்கு அனுப்பிவைத்த நண்பர்கள்..!

‘இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’ என எஸ்.பி.பியின் பாடல் ஒன்று பேமஸ். பாடல் பாடுபவருக்கு மட்டுமல்ல, இசையை ரசிப்போருக்கும் இந்த வரிகள் பொருந்தும். அதிலும் இளையராஜாவின் இசை என்றால் மொத்த தமிழர்களுமே சொக்கித்தான் போவார்கள்.

   

இன்றும் தமிழர்களின் நாள்களை இளையராஜாவே அழகூட்டிக் கொண்டிருக்கிறார். அவரது பாடல்கள் இல்லாத ஒருநாளைக்கூட இங்கே பலராலும் கற்பனையும் செய்து பார்த்துவிட முடியாது. அந்த அளவுக்கு இளையராஜாவின் இசைவளம் தமிழர்களின் நாடி, நரம்பெல்லாம் கலந்திருக்கிறது. அந்த வரிசையில் ஒரு வாலிபர் இளையராஜா பாடல்களின் மீது தீராத காதல் கொண்டவர். அவர் எப்போதும் இளையராஜா பாடல்களை விரும்பிக் கேட்பார்.

யாரும் எதிர்பாராதவிதமாக உடல்நலகுறைவால் திடீரென அவர் இறந்துபோனார். இந்நிலையில் இளைய்ராஜா மீது அவருக்கு இருக்கும் பாசத்துக்கு மதிப்பளிக்கும்வகையில் ‘இளமை என்னும் பூங்காற்று’ என்னும் இளையராஜாவின் பாடலை இசைத்தும், பாடியும் கொண்டே அவரை அவரது நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர். சோகத்திலும், சந்தோசத்திலும் எப்போதும் இளையராஜா உடனிருப்பார் என்பார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சியை நீங்களே பாருங்களேன்.