உயிருடன் பிடிப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ராட்சத மீன்! கடும் அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்… எடை எவ்வளவு தெரியுமா?

ஸ்டர்ஜன் வகை மீன் குறித்து ஆய்வில் ஈடுபட்டபோது 100 ஆண்டுகள் பழமையான மீன் ஒன்று சிக்கியது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை (US Fish and Wildlife Service) மையம் கடந்த வாரம் டெட்ராய்டு ஆற்றில் (Detroit River) ஆய்வில் ஈடுபட்டது.

   

ஸ்டர்ஜன் மீன் குறித்த அந்த ஆய்வில் நிபுணர்கள் 3 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆற்றில் பயணிக்க தொடங்கி சில நிமிடங்களில் மீன் ஒன்றை கண்ட ஆய்வாளர்கள் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதலில் சிறிய வகை மீன் என நினைத்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் எண்ணியதற்கும் மேலாக எடையுடைய மிகப்பெரிய ஸ்டர்ஜன் மீன் சிக்கியுள்ளது.

படகில் எடுத்து அந்த மீனை அளவிட்டபோது மேலும் வியக்கத்தக்க விஷயங்கள் ஆய்வாளர்களுக்கு கிடைத்தது.

7 அடி நீளம் கொண்ட அந்த மீனின் சுற்றளவு மற்றும் மற்ற அளவுகளை கணக்கிட்டபோது சுமார் 108 கிலோ எடை இருந்த அந்த மீன் 100 ஆண்டுகள் பழமையானது என்றும், பெண் ஸ்டர்ஜன் மீன் என்றும் தெரியவந்தது.

இதனால் வியப்படைந்த ஆய்வாளர்கள் இது குறித்த புகைப்படத்தை அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தனர்.

இணையத்தில் வைரலான அந்த புகைப்படம் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து பகிர்ந்திருந்தனர்.