உயிர் இழந்த தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மகன்கள் , வைரல் வீடியோ ..

சமீப காலங்களாக இவுலகமானது பல தொழில் நுட்பம் நிறைந்த வசதிகளை கொண்டு இயங்கி வருகிறது , அந்த வகையில் மக்கள் அதற்கூடவே பயணித்து செல்ல வேண்டிய கட்டாயமானது ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும் ,

   

சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் அனுப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதவ். இவருக்கு திடீரென கடந்த வியாழக்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கோரியுள்ளனர்.

இதனால் தாயினை அழைத்துக் கொண்டு அவரின் மகன்கள் சிகிச்சைக்காக ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஷாதோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் சிகுச்சை பலனளிக்காமல் உயிர் இ ழந்துள்ளார் , இவரது சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்த படியே தூக்கி சென்ற காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி மன சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது ,