இறந்த குட்டி யானையை யானை கூட்டம் ஊர்வலமாகத் தூ க்கிச் சென்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைகள் பொதுவாகவே மனிதன் போன்ற இயல்பை கொண்டவை. மற்ற உ யி ரினங்கள் குட்டிகள் பிறந்து கொஞ்சம் வளர்ந்ததும் அதை தனித்து விட்டுவிடும். ஆனால் யானை கூட்டம் குடும்பத்துடன் ஒன்றாகவே வாழும். எல்லோருக்கும் பொதுவாக வயது முதிர்ந்த பெண் யானை கூட்டத்திற்குத் தலைமைப் பண்பை ஏற்கும்.
அந்த வகையில் யானை கூட்டம் ஒன்று இ ற ந்து போன குட்டியை வைத்துக் கொண்டு இறுதி ஊர்வலம் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் பிரவீண் கஸ்வான் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் எடுத்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தாய் யானை ஒன்று இ ற ந்த தன் குட்டி யானையை சோகத்துடன் தூ க்கிக் கொண்டு சாலையை கடக்கிறது.
அதன் பின் மற்ற யானைகள் கூட்டமாக வர, தூ க்கி வந்த கு ட்டி யானையை சாலையின் ஓரத்தில் போட்ட தாய் யானை சோ கத்துடன் நிற்கிறது. பின் மற்ற யானைக்கு ஆ றுதல் சொல்வது போல அதன் அருகே சென்று நிற்க மீண்டும் இ ற ந்த கு ட்டியைத் தூ க்கி கொண்டு காட்டுக்குள் சோ கமாகச் செல்கிறன. இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து கருத்து கூறியுள்ள பிரவீண் கஸ்வான், சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்களைத் தவிர்த்து யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
This will move you !! Funeral procession of the weeping elephants carrying dead body of the child elephant. The family just don’t want to leave the baby. pic.twitter.com/KO4s4wCpl0
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 7, 2019