
ஊசி போடுவதற்கு பயந்து கொண்டு நாய் செய்த செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் இந்த வீடியோக்களை அதிக அளவில் பார்த்து வருகிறார்கள் . youtube, twitter, instagram போன்ற பக்கங்களில் தொடர்ந்து வீடியோக்கள் குவிந்து வருகின்றது.
அதிலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்களும், குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டி தொடர்பான வீடியோக்கள் அதிகம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ ரசிக்க கூடிய வகையிலும் நகைச்சுவை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.
இந்த வீடியோவில் மருத்துவமனையில் ஒரு அறையில் நாய் ஒன்று இருப்பதையும் அதன் அருகில் மருத்துவர் ஒருவர் இருப்பதையும் பார்க்கலாம். அந்த ஊழியர் நாய்க்கு ஊசி போட முற்படுகிறார், அதன் கையைப் பிடித்துக் கொண்ட நாய் போட வேண்டாம் என்று பிடித்துக் கொள்கின்றது. அதுமட்டுமில்லாமல் அவரை கொஞ்சுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…