ஊரடங்கில் சுற்றிய இளைஞர்.. மாலை போட்டு ஆரத்தி எடுத்த போலீசார்! வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் தமிழகத்தை ஆட்டிபடைத்திகொண்டிருக்கும் நேரத்தில், பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

மோசமான சூழ்நிலையில் இருக்கும் இந்தியா மீண்டு வர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. ஆனாலும், மக்கள் சிலர் எந்தவித அச்சமின்றி சுற்றிவருவது வேதனை அளிக்க கூடிய ஒரு செயல் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

   

மேலும், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. அதிலும், குறிப்பாக கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்து பதிவானது.

இதனால் அங்கு பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பெங்களூருவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்த ஒருவருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

அதன்படி அவருக்கு மாலை மரியாதை செய்து, ஆரத்தி எடுத்துள்ளனர். போலீசாரின் இந்த செயலை வீடியோ எடுத்த ஒருவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி பெரிய விவாதமாக மாறியுள்ளது….